கோவிலில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் மாநிலங்களை ஆளுகின்றனர் - யோகி ஆதித்யநாத்தை சாடிய மந்திரி

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஏஜெண்டுகளாக இருந்த நாட்டின் 10 சதவிகித மக்கள் தங்கள் உத்தரவுகளை தற்போது 90 சதவித மக்களை உள்ளடக்கியவர்கள் பக்கம் திருப்புகின்றனர் என்றார்.

Update: 2023-01-22 15:03 GMT

பாட்னா,

பீகார் மாநில வருவாய்த்துறை மந்திரியாக செயல்பட்டு வருபவர் அலோக் மேதா. இவர் அம்மாநிலத்தின் பகல்பூர் மாவட்டத்தில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது மந்திரி அலோக் பேசுகையில், கோவில்களில் மணி அடித்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது அதிகாரம் மிக்க பதவிகளை ஆக்கிரமித்துள்ளனர். உதராணத்திற்கு உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பாருங்கள்.

பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் ஏஜெண்டுகளாக இருந்த நாட்டின் 10 சதவிகித மக்கள் தங்கள் உத்தரவுகளை தற்போது 90 சதவித மக்களை உள்ளடக்கிய பின்தங்கிய மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுகத்தினர் பக்கம் திருப்புகின்றனர்.

ஜக்தேவ் பாபுவால் (பீகார் முன்னாள் துணை முதல்-மந்திரி) பிரதிநிதிதுவப்படுத்தப்பட்ட 90 சதவிகித மக்கள் முதலில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தால் சுரண்டப்பட்டனர். பின்னர் அவர்களின் ஏஜெண்டுகளான 10 சதவிகித மக்களால் சுரண்டப்பட்டனர்' என்றார்.   

Tags:    

மேலும் செய்திகள்