கொரோனாவுக்கு பெற்றோரை இழந்தவர்கள் பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

கொரோனாவுக்கு பெற்றோரை இழந்தவர்கள் பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ளும்படி மத்திய மந்திரி ஷோபா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-05-31 15:38 GMT

சிக்கமகளூரு;

மத்திய மந்திரி ஷோபா

மத்திய மந்திரி ஷோபா சிக்கமகளூருவுக்கு நேற்றுமுன்தினம் வந்தார்.

பின்னர் அவர், சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர், பிள்ளைகளுக்கு நிதி உதவிக்கான தொகுப்பை வழங்கி பேசியதாவது:-

பயன்படுத்தி கொள்ள வேண்டும்

பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான உதவிகள் வழங்கப்படுகிறது. அதில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவியும் ஒன்று. இவர்கள் 23 வயதை எட்டும்போது ரூ.10 லட்சம் கிடைக்கும். இது வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கும். ஆகையால் அதனை கருத்தில் கொண்டு கொரோனாவுக்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிரதமரின் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரமேஷ், சிருங்கேரி தொகுதி எம்.எல்.ஏ. ராஜேகவுடா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதையடுத்து மத்திய மந்திரி ஷோபா, சிக்கமகளூரு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த கைத்தொழில் குறித்த கருத்தரங்கு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்