பிரதமரை எந்நேரமும் குறை கூறுபவர்கள் பேச்சு சுதந்திரம் இல்லை என கதறுகிறார்கள்: மத்திய மந்திரி காட்டம்

எந்நேரமும் தடையின்றி பிரதமரை குறை கூறுபவர்கள் நாட்டில் பேச்சு சுதந்திரம் இல்லை என கூறுகிறார்கள் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

Update: 2022-09-04 11:33 GMT



புதுடெல்லி,



சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தேசிய செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது, இன்று நிலைமை மோசமடைந்து காணப்படுகிறது. ஒரு பொது இடத்தில் நின்று கொண்டு, எனக்கு பிரதமரின் முகம், பார்க்க பிடிக்கவில்லை என கூறினால், சிலர் என்னிடம் சோதனைக்கு வருவார்கள்.

எந்த காரணமுமின்றி என்னை கைது செய்து, சிறையில் தள்ளுவார்கள் என நான் சொல்லியே ஆக வேண்டும். குடிமக்களாக இதனையே, நாங்கள் அனைவரும் எதிர்க்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதுபற்றி மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், உண்மையில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி இதனை கூறினாரா? என எனக்கு தெரியாது. அது உண்மையெனில், அவரது பேச்சே அவர் பணியாற்றிய அமைப்பை இழிவுப்படுத்துகிறது என தெரிவித்து உள்ளார்.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல பிரதமரை எந்த நேரமும் தடைகள் எதுவுமின்றி தரக்குறைவாக எந்த மக்கள் பேசுகின்றார்களோ, அவர்கள் வந்து பேச்சு சுதந்திரம் இல்லை என்று கதறுகிறார்கள்.

காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நெருக்கடி நிலை பற்றி அவர்கள் ஒருபோதும் பேசியது இல்லை. சில மாநில கட்சி முதல்-மந்திரிகளை பற்றி விமர்சிக்க கூட ஒருபோதும் அவர்களுக்கு தைரியம் வந்தது இல்லை என்றும் ரிஜிஜூ தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்