ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்: பிரதமர் மோடி உறுதி

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Update: 2023-06-03 14:39 GMT

புதுடெல்லி,

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில், 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 700 க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒடிசா விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, பாலசோர் மாவட்ட மருத்துவமனைக்குச் சென்ற பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருத்துவர்கள் பிரதமர் மோடியிடம் விளக்கினர். பின்னர், அங்கிருந்தவாறு அமைச்சரவை செயலர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக  பேசிய பிரதமர்  மோடி, காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை வழங்க உத்தரவிட்டடார். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர்  டிடி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பிரதமர்  மோடி கூறியதாவது: "இது ஒரு துயரமான சம்பவம். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் அரசு வழங்கும். ஒவ்வொரு கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்