எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

எல்லை அருகே நடப்பாண்டில் இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;

Update:2024-07-10 19:02 IST

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் 553 கி.மீ. நீளம் கொண்ட இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் டிரோன்கள் மூலம் போதைப்பொருள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை கடத்தப்படுகின்றன.

இதனை எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக கண்காணித்து, கடத்தல் முயற்சிகளை தடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை அருகே இதுவரை 126 டிரோன்கள், 150 கிலோ ஹெராயின் போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. அதே சமயம், கடந்த 2023-ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 107 டிரோன்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்