இது இயற்கை நீதியை மீறும் செயல் - பிரதமருக்கு கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கடிதம்

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது இயற்கை நீதியை மீறும் செயல் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-08 05:41 GMT

திருவனந்தபுரம்,

டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா கைது இயற்கை நீதியை மீறும் செயல் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், சிசோடியாவின் கைது மத்திய புலனாய்வு அமைப்புகளின் மீதான விமர்சனத்துக்கு வலுவூட்டியுள்ளது. கூட்டாட்சி கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட யார் மீதும் அதிகப்படியான நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில் பிரதமரின் வழிகாட்டுதல் தற்போதைய நிலையை மாற்றுவதற்கு பெரிதும் உதவும் என நம்புவதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார். எந்த ஆதாரமும் இல்லாமல் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டிருப்பது இயற்கை நீதியை மீறும் செயலாகும் என்று அந்த கடிதத்தில் பினராயி விஜயன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்