கேரளா உட்பட 5 மாநில கவர்னர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
கேரள மாநில கவர்னராக செயல்பட்டு வந்த ஆரிப் முகமது கான், பீகார் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டில் சில மாநிலங்களின் கவர்னர்களை மாற்றி அமைத்தும், புதிதாக சிலரை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார். அதன் விபரம் பின்வருமாறு;
1. பீகார் மாநில கவர்ன்ராக செயல்பட்டு வந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
2. கேரள மாநில கவர்னராக செயல்பட்டு வந்த ஆரிப் முகமது கான், பீகார் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3. மிசோரம் மாநில கவர்னராக செயல்பட்டு வந்த ஹரிபாபு கம்பம்பதி, ஒடிசா மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
4. முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
5. முன்னாள் மத்திய மந்திரி விஜய் குமார் சிங், மிசோரம் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஒடிசா கவர்னர் ரகுபர் தாசின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.