ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும் இந்த அரசு விசாரிக்கும்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு

ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும், அவர்கள் எவ்வளவு பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தபோதும் கூட இந்த அரசாங்கம் விசாரிக்கும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

Update: 2023-04-26 10:14 GMT

பெலகாவி,

கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகாவில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இடையே கடுமையான போட்டி காணப்படுகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு, கர்நாடகாவின் பெலகாவி நகரில் இன்று நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார். அவர் பேசும்போது, ஊழலானது இன்று தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது.

பெரிய தலைவர்கள் எல்லாம் சிறைக்கு போய் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியினர், இந்த விசாரணையை உள்நோக்கம் கொண்டது என எந்தவித அடிப்படை சான்றுகளும் இன்றி கூறி வருகின்றனர்.

இந்த அரசாங்கம், ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும், அவர்கள் எவ்வளவு பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தபோதும் கூட விசாரணை மேற்கொள்ளும் என்று மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்