'டெல்லி மேயர் தேர்தலில் நம்பிக்கை உள்ளது' - மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க. கருத்து
டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகள் கோலோச்சிய பா.ஜனதா, 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
புதுடெல்லி,
டெல்லி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 250 இடங்களில் 134 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அங்கு கடந்த 15 ஆண்டுகள் கோலோச்சிய பா.ஜனதா, 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 9 வார்டுகளையும், மீதமுள்ள 3 இடங்களை சுயேச்சைகளும் பிடித்தன.
இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி அமித்மால்வியா தனது டுவிட்டர் பதிவில், "கவுன்சிலர்கள் தேர்தல் முடிவுதான் வெளிவந்துள்ளது. இன்னமும் மேயர் தேர்தல் உள்ளது. கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்ந்தெடுக்க வேண்டும். சண்டிகாரில் கவுன்சிலர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதும் மேயர் பதவியை பா.ஜ.க. வென்றது" என்று குறிப்பிட்டுள்ளார்.