ரூ.5 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருட்டு; மா்மநபா்களுக்கு வலைவீச்சு
உப்பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் திருடிய மா்மநபா்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
உப்பள்ளி;
தாா்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் பழைய உப்பள்ளி அருகே கூடகொண்டகுனசி கிராமத்தை சோ்ந்தவர் ஈரண்ணா. கட்டிட தொழிலாளியான இவர், 200 சென்ரிங் இரும்பு பிளேட்டுகள் மற்றும் கட்டிங் எந்திரங்கள் உள்ளிட்ட கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களை அப்பகுதியில் உள்ள குடோனில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அந்த குடோனின் கதவின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்துள்ளனர். பின்னா் அவர்கள், அங்கிருந்த கட்டுமான பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் குடோனிற்கு வந்த ஈரண்ணா, கதவின் பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது அங்கிருந்த கட்டுமான பொருட்கள் திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு மர்மநபர்கள் கட்டுமான பொருட்களை திருடிசென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர், உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனா்.