இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2023-06-29 18:45 GMT

மங்களூரு-

இளம்பெண்ணை கற்பழித்து கொன்ற வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

இளம்பெண் கற்பழித்து கொலை

கேரள மாநிலம் மஞ்சேஸ்வர் தாலுகா படூ்ர் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அஸ்ரப் (வயது 33). இவா், கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் உல்லால் அருகே பலேபுனி பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், அந்தப்பகுதியை சேர்ந்த இளம்ெபண் ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த முகமது அஸ்ரப், அவரது வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண்ைண வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளார்.

பின்னர் முகமது அஸ்ரப், இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். இதையடுத்து போலீசில் சிக்காமல் இருப்பதற்காக அவர், இளம்பெண்ணின் உடலை தீவைத்து எரித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு முகமது அஸ்ரப் தப்பி ெசன்றுவிட்டார். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ந்தேதி நடந்தது.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முகமது அஸ்ரப்பை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு மங்களூரு 6-வது கூடுதல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி காந்தராஜு தீர்ப்பு வழங்கினார். அப்போது, முகமது அஸ்ரப் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்