இமாச்சலத்துக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் - ப.சிதம்பரம்

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கண்டு ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2023-07-10 17:07 GMT

புதுடெல்லி,

வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பருவமழையினால் கடந்த சில நாட்களில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 22 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார். மாநிலத்தில் அமைந்துள்ள சாலைகள், மின்மாற்றிகள், துணை மின் நிலையங்கள் மற்றும் நீர் விநியோக திட்டங்கள் என பெரிய அளவில் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தோராயமாக ரூ.3,000 கோடி முதல் ரூ.4,000 கோடி வரையில் இந்த சேதம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இமாச்சலம், பஞ்சாப், அரியானாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை கண்டு ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் உள்ளது எனவும். இமாச்சலத்தில் மட்டும் மிகப்பெரும் பேரழிவைச்சந்தித்துள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள இமாச்சலத்துக்கு தேவையான நிதியுதவியை மத்திய அரசு வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்