வாலிபர், அரிவாளால் வெட்டி கொலை

உப்பள்ளியில் வாலிபர், அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Update: 2023-02-19 20:48 GMT

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் உப்பள்ளி பழைய உப்பள்ளி போலீஸ் நிலையம் அருகே நேக்கார் நகரில் நேற்று மதியம் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் பழைய உப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த வாலிபரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் யார், எந்தப்பகுதியை சேர்ந்தவர் போன்ற எந்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து பழைய உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்