சிறுவனை தாக்கி துன்புறுத்திய போலீஸ்காரர்

ஹாசன் அருகே மனைவியின் செல்போனை திருடியதாக கூறி சிறுவனை அடித்து போலீஸ்காரர் துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-09 17:46 GMT

ஹாசன்-

செல்போன் திருடியதாக கூறி...

ஹாசன் மாவட்டம் பேளூரு தாலுகா முண்டுகட்டே கிராமத்தை சேர்ந்தவா பிரீத்தம். பேளூரில் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்காக பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தான். கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையொட்டி கிராமத்தில் உள்ள பாட்டி வீட்டிற்கு பீரித்தம் வந்துள்ளான். அப்போது அங்கு பாட்டியுடன் உறவினர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டான். இதில் சிக்கமகளூருவை சேர்ந்த சாலினி என்ற பெண் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது அங்கு சாலினி தனது செல்போனை தவறவிட்டுள்ளார். அப்போது சாலினி, பிரீத்தம்தான் அந்த செல்போனை திருடியதாக நினைத்து விசாரித்தார். அதற்கு சிறுவன் நான் திருடவில்லை என்று கூறினான். இதனை நம்பாத சாலினி தனது கணவரான சிக்கமகளூரு போலீஸ் நிலைய போலீஸ்காரர் ஜெகதீஷ் என்பவரை அழைத்து நடந்ததை கூறினார். இதையடுத்தது அவர், சிறுவனை அழைத்து விசாரிப்பதுபோன்று அடித்து உதைத்துள்ளார்.

சிறுவன் மீது தாக்குதல்

மேலும் திருமண மண்டபத்தில் இருந்து ஆள் நடமாட்டம் இல்லாத சோளக்காட்டிற்கு அழைத்து சென்று சிறுவனை துன்புறுத்தியுள்ளார். சிறுவன், செல்போனை எடுக்கவில்லை என்று கூறியுள்ளான். ஆனால் அதனை ஜெகதீஷ் கேட்காமல் தனது நண்பர் ஒருவர் உதவியுடன் சிறுவனை சோளக்காட்டு பகுதியில் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதற்கிடையில் மகனை காணோம் என்று உறவினர்கள், ெபற்றோர் தேடி வந்தபோது, சோளக்காட்டில் சிறுவன் கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறுவனை மீட்ட உறவினர்கள், பேளூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி பேளூரு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ஜெகதீஷ், அவரது மனைவி சாலினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்