பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளியின் சுற்றுச்சுவர் இடிப்பு

ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் தீவிரமாக கடந்து வரும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பள்ளியின் சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டது.

Update: 2022-10-12 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் ராஜகால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ள கட்டிடங்களை இடித்து அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக மகாதேவபுரா மண்டலத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஹீடி, கே.ஆர்.புரம், ஒயிட்பீல்டுவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடந்தது. இந்த பணியின் போது ஒயிட்பீல்டுவில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 70 மீட்டர் நீளமுள்ள சுற்றுச்சுவர் இடித்து அகற்றப்பட்டது.

ஹீடியில் ராஜகால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஒரு தனியார் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது. மேலும் பள்ளியின் அருகே இருந்த 3 கொட்டகைகளும் அகற்றப்பட்டன. ஒயிட்பீல்டு வெளிவட்ட சாலையில் ஒரு ஓட்டலின் சுவர் இடிக்கப்பட்டது. மேலும் ஓட்டலின் ஆக்கிரமிப்பு பகுதியில் கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது. அந்த கண்ணாடியை தாங்களே அகற்றுவதாக ஓட்டல் நிர்வாகத்தினர் கூறினர். இதனால் உடனடியாக கண்ணாடியை அகற்றும்படி ஓட்டல் நிர்வாகத்துக்கு, மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்