பெங்களூருவில் ஜூலை 13,14-ம் தேதிகள் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் - சரத்பவார் அறிவிப்பு

எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெறுகிறது என சரத்பவார் அறிவித்துள்ளார்.

Update: 2023-06-29 11:36 GMT

மும்பை,

பீகார் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 23-ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிம்லாவில் 2-வது கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் 13,14-ம் தேதிகளில் நடைபெறும் என சரத்பவார் அறிவித்துள்ளார்.

இமாச்சலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதிலாக பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்