பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயங்கவில்லை; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பேட்டி

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயங்கவில்லை என்று வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-30 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி தேர்தல் குறித்து ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவு குறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு மாநகராட்சி வார்டு இட ஒதுக்கீட்டை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் கலந்து ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இட ஒதுக்கீட்டை இறுதி செய்ய மீண்டும் குழு அமைக்க வேண்டுமா? அல்லது அதிகரிகள் மூலம் குழப்பங்களை சரிசெய்ய முடியுமா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.

மாநகராட்சி தேர்தலை நடத்த அரசு தயங்கவில்லை. இந்த தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பது அரசின் விருப்பம் ஆகும். மாநகராட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நாங்கள் வார்டு இட ஒதுக்கீட்டு பட்டியலை அறிவித்தோம்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்