ஏற்றுமதிக்கான 45 சதவீத வரி விதிப்பை மத்திய அரசு திருப்ப பெற வேண்டும்

கே.ஐ.ஓ.சி.எல். இரும்புத்தாது நிறுவனத்தின் ஏற்றுமதிக்கான 45 சதவீத வரி விதிப்பை மத்திய அரசு திருப்ப பெற வேண்டும் என யு.டி. காதா் எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்

Update: 2022-06-06 15:17 GMT

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே மத்திய அரசுக்கு சொந்தமான கே.ஐ.ஓ.சி.எல். நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் உருக்கு மற்றும் தொழிற்சாலை துறையின் கீழ் இயங்குகிறது.


இந்த நிறுவனம் குதுரேமுக் போன்ற சுரங்கங்களை நடத்தி வருகிறது. மேலும், உருக்கு, இரும்புத்தாது போன்றவற்றை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு இந்த நிறுவனத்தின் ஏற்றுமதி மீது 45 சதவீதம் வரிவிதித்து உள்ளது. இதுகுறித்து தட்சிண கன்னடா மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் பேசியதாவது:-

மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிப்படைய செய்து, அதன் மூலம் தனியாரிடம் அவற்றை ஒப்படைக்க திட்டமிட்டு வருகிறது. தட்சிண கன்னடாவில் செயல்பட்டு வரும் முக்கிய நிறுவனங்களில் கே.ஐ.ஓ.சி.எல்.-ம் ஒன்று. தற்போது மத்திய அரசு இந்த நிறுவனம் மீது 45 சதவீத ஏற்றுமதி வரி விதித்துள்ளது.


இதனால் நிறுவனத்தின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. "குதுரேமுக் கடலோர கர்நாடகத்தின் பெருமையாக நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன் புகழ்பெற்ற வரலாறு மற்றும் தொழில்துறைக்கான பங்களிப்பு பொருளாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது,".

அரசாங்கம் சமீபத்தில் ஏற்றுமதி அலகுக்கு 45 சதவீத வரி விதித்துள்ளது. குத்ரேமுக் இரும்புத் தாது நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட கடுமையான வரிகளின் தீங்கான தாக்கம் கவலை அளிக்கிறது. எனவே மத்திய அரசு விதித்த ஏற்றுமதி வரியை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்