பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.5.52 லட்சம் நகைகள் திருட்டு

தார்வாரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து ரூ.5.52 லட்சம் மதிப்பிலான நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

Update: 2023-02-25 18:45 GMT

உப்பள்ளி:-

தார்வார் மாவட்டம் பழைய உப்பள்ளியை அடுத்த சிம்லா நகர் பகுதியை சேர்ந்தவர் சகுந்தலா, ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிைலயில் அன்றய தினம் நள்ளிரவு வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி, வைர நகைகளை போலீசார் திருடி சென்றனர். நேற்று முன்தினம் இரவு சகுந்தலா வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். பீரோவில் இருந்த ரூ.4.92 லட்சம் தங்க நகைகள், ரூ.44 ஆயிரம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் வைர நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்த மதிப்பு ரூ.5.52 லட்சம் என்று கூறப்படுகிறது. இது குறித்து சகுந்தலா கொடுத்த புகாரின் பேரில் பழைய உப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்