6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

Update: 2023-04-09 18:31 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளது.

நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 155 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு, நேற்று தொற்று 6 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. 5 ஆயிரத்து 357 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரத்து 616 ஆக உயர்ந்தது.

கொரோனாவில் இருந்து 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 726 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 92 ஆயிரத்து 837 பேர் நோயில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 1,620 அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி, 32 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தொற்றுக்கு நேற்று முன்தினம் 11 பேர் பலியானார்கள். நேற்றும் 11 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் 3 பேர், இமாசலபிரதேசத்தில் 2 பேர், பீகார், சத்தீஷ்கார், மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கேரளாவில் ஒரு விடுபட்ட மரணம் என மொத்தம் 11 பேர் பலியானார்கள்.

இதுவரையிலான மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 965 ஆக அதிகரித்தது.

Tags:    

மேலும் செய்திகள்