குரங்கு அம்மை நோய் பரவலை கண்காணிக்க குழுவை நியமித்து மத்திய அரசு உத்தரவு

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-08-01 08:36 GMT

புதுடெல்லி,

கேரளாவில் குரங்கு அம்மை அறிகுறியுடன் திரிச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயது இளைஞர் திடீரென உயிரிழந்தார்.

அவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பபட்டது. அதன் ஆய்வு முடிவுகள் வராத நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து, இளைஞருக்கு உடலில் வேறு எந்த நோயும்,பிற உடல்நல பிரச்சினைகளும் இல்லாத நிலையில், அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து ஆராயப்படும் எனவும், சிகிச்சை அளிப்பதில் குறைப்பாடு உள்ளதா என்பது குறித்தும் உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பரவல் மற்றும் பாதிப்புகளை கண்காணிக்க நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் தலைமையில் கண்காணிப்பு குழுவை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில் மத்திய சுகாதார அமைச்சகம், பார்மா மற்றும் பயோடெக் துறைகளின் செயலாளர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்