ரூ.70,000 கோடியில் ராணுவ தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்..!

ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.;

Update:2023-03-16 17:33 IST

புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, நமது நாட்டின் பாதுகாப்பு துறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. முப்படைகளும் பலம் வாய்ந்ததாக இருக்க வேண்டும், எந்த சவாலையும் எந்த நேரத்திலும் சந்திக்கத்தக்க அளவில் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.

அதற்காக முப்படைகளும் நவீனமயமாக இருக்க வேண்டும் என்று எண்ணி ,அவற்றுக்காக நவீன ஆயுதங்களையும், தளவாடங்களையும் வாங்குவதில் ஆர்வம் செலுத்துகிறது.

இந்த நிலையில், இந்திய ராணுவத்துக்கு ரூ.70,000 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடற்படைக்கு 60 யு.எச். ரக ஹெலிகாப்டர்களை எச்.ஏ.எல். நிறுவனத்திடம் இருந்து ரூ.32,000 கோடியில் வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ள இந்தியா...!

Tags:    

மேலும் செய்திகள்