லிப்டிற்குள் பெண்ணை கட்டிப்பிடித்து மானபங்கம் செய்த தொழில் அதிபர்

தொழில் அதிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2024-05-09 13:30 IST

மும்பை,

மும்பையை சேர்ந்த 38 வயது தொழில் அதிபர் ஒருவர், கார் ரோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 2-வது மாடியில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 29-ந்தேதி இவரது நிறுவனத்திற்கு செல்ல லிப்ட்டில் ஏறி சென்றார். அதே அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வரும் 43 வயதுமிக்க பெண் ஒருவரும் லிப்ட்டில் ஏறினார்.

அப்போது, தனியாக இருந்த பெண்ணை கண்ட தொழில் அதிபர் சபலம் அடைந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசி, கட்டிப்பிடித்து மானபங்கம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சத்தம் போட்டார். பின்னர் அங்கிருந்து வெளியேறி தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்