சாலையில் ஓடி கொண்டிருந்த போதே திடீரென கொளுந்து விட்டெரிந்த பேருந்து.. டிரைவர் செய்த செயலால் தப்பிய உயிர்கள்
ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 16 பேரும் உயிர்தப்பினர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து அமராவது நோக்கி இன்று காலை சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பேருந்தில் இருந்த 16 பேரும் உயிர்தப்பினர்.
இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதுமாக எரிந்து தீக்கிரையானது. பேருந்து எரிந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.