மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் நாளை மறுநாள் வெளியாகிறது

மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கை வரலாறு புத்தகம் நாளை மறுநாள் வெளியாகிறது.

Update: 2022-08-23 22:28 GMT


பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இந்த நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகம் வருகிற 26-ந் தேதி(நாளை மறுநாள்) வெளியிடப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடக்கிறது. இந்த புத்தகத்தை ராகுல் ராமகுண்டம் எழுதி உள்ளார்.

இந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜார்ஜ் பெர்னாண்டசின் தம்பி மைக்கேல் பெர்னாண்டஸ், பாதிரியார் மெல்வின் ஜோசப் பிரின்டோ உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி எழுத்தாளர் ராகுல் ராமகுண்டம் கூறுகையில், '12 வருடமாக ஆய்வு மேற்கொண்டு இந்த புத்தகம் எழுதப்பட்டு இருக்கிறது. மங்களூரு அருகே பிஜாய் பகுதியில் பிறந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் படிப்படியாக உயர்ந்தது எப்படி, அவரது வாழ்க்கை வரலாறு உள்ளிட்டவை இந்த புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்