பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்த இந்தியாவுக்கு நன்றி: ரணில் விக்ரமசிங்கே

நாகை- இலங்கை இடையே கப்பல் இயக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Update: 2023-07-21 07:37 GMT

புதுடெல்லி,

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள், இலங்கை, தமிழர் நலன் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசியதாக தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் மக்கள் தொடர்பு, விமான சேவை, எரிவாயு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், நாகை- இலங்கை இடையே கப்பல் இயக்க இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனை தொடர்ந்து இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது;

கடந்த ஆண்டில் இலங்கை பொருளாதாரம், சமூகம் மற்றும் அரசியல் ரீதியாக சந்தித்த அசாதாரண சவால்களை பிரதமர் மோடியிடம் நான் விவாதித்தேன். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு உறுதுணையாக இருந்த இந்தியாவுக்கு நன்றி.

இந்திய மக்களின் வளர்ச்சி மற்றும் செழிப்பை உறுதி செய்வதில் பொருளாதார உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றில் பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

இந்தியாவின் வளர்ச்சி அண்டை நாடுகளுக்கும் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்