மனித கடத்தலை எதிர்கொள்ள... சமூகத்திற்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை விடுத்த வேண்டுகோள்

மனித கடத்தலை எதிர்கொள்ள பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் ஒன்றிணைய வேண்டும் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டு கொண்டுள்ளார்.;

Update:2023-09-12 17:00 IST

ஐதராபாத்,

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மனித கடத்தல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கில், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, உறுப்பினர் செயலாளர் மீனாட்சி நேகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசும்போது, பெருமளவில் ஐதராபாத் நகரமே கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளது. இதில் ஆபத்தில் சிக்க கூடிய சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகளவில் உள்ளனர்.

அதனால், மனித கடத்தல் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது மகளிர் மற்றும் குழந்தைகள் அல்லது கடத்தலில் பாதிக்கப்படுவோருக்கு உதவிடும் வகையில் இருக்கும். நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என பேசியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, மனித கடத்தலை எதிர்கொள்வதற்கு பொதுமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் மற்றும் சமூக மக்கள் என ஒவ்வொருவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்