தெலுங்கானா: பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. மாரடைப்பால் காலமானார்

தெலுங்கானா பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குஞ்ஜா சத்யவதி மாரடைப்பால் இன்று காலமானார்.

Update: 2023-10-16 09:27 GMT

ஐதராபாத்,

தெலுங்கானாவில் பத்ராசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குஞ்ஜா சத்யவதி. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்று 2009 முதல் 2014 ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தவர்.

இதன்பின்னர் அவர், பா.ஜ.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றினார். இந்நிலையில், குஞ்ஜா சத்யவதிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

எனினும், அவர் வழியிலேயே காலமானார். அவரது மறைவுக்கு மத்திய மந்திரி மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் சிலர் இரங்கல்களை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்