'வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜில்' கடத்தல் நாடகம்: காதலனுடன் விமானத்தில் வெளிமாநிலம் சென்ற சிறுமி

தனது சகோதரனின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜில் தன்னை யாரோ கடத்திவிட்டனர் என்று அந்த சிறுமி கூறியுள்ளார்.

Update: 2023-06-19 06:20 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் பஹல்கர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பராமரிப்பு (House Keeping) பிரிவில் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை வேலை சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை தேடியுள்ளனர். அப்போது, அந்த சிறுமி தனது சகோதரனின் வாட்ஸ் அப் எண்ணுக்கு வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தன்னை யாரோ கடத்திவிட்டதாக கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் செல்போன் எண்ணை கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுமி கடத்தல் நாடகமாடியது தெரியவந்துள்ளது. சிறுமி தனது காதலனுடன் மும்பையில் இருந்து விமானம் மூலம் மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தா சென்றுள்ளார். காதலனுடன் சிறுமி விமானத்தில் கொல்கத்தா சென்றுவிட்டு தன்னை யாரோ கடத்தியது போல் நாடகமாடியுள்ளார். சிறுமியின் கடத்தல் நாடகத்தை அறிந்த மும்பை போலீசார் சிறுமி மற்றும அவரது காதலனை தேடி கொல்கத்தா சென்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்