மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி.! அதிர்ச்சி சம்பவம்
சிறுமி, தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் சிறுமி ஒருவர் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால், பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சிறுமி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
15 வயதான சிறுமி, திடீரென மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.