மாநில உணவு பாதுகாப்பு குறீயீடு : முதலிடத்தில் தமிழ்நாடு
2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது
புதுடெல்லி ,
2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது .பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்படுகிறது. அந்த வகையில் , 2021-2022 ஆம் ஆண்டிற்கான உணவு பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டுள்ளது .
அதில் பெரிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது .இரண்டாவது இடத்தில் குஜராத் , 3வது இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது .மேலும், சிறிய மாநிலங்களுக்கான பட்டியலில் கோவா முதலிடத்திலும்,மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், சிக்கிம் 3-வது இடத்திலும் உள்ளது.