தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது: நிர்மலா சீதாராமன்
மழை பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
புதுடெல்லி,
தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
*மழை பாதிப்புகளை குறைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
*6 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தாதது ஏன்?
*தமிழக மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது.
*மாநில பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான வழிமுறைகளை அதிகாரிகள் தெரிவிப்பார்கள்.
"மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டபோது தமிழக முதல்-அமைச்சர் எங்கே இருந்தார்? தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனையில் இருந்தார்.
*கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை முடித்து போகிற போக்கிலேதான் பிரதமர் மோடியை மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
*பேரிடரின்போது டெல்லியில் இருந்துகொண்டு மத்திய அரசை குறை கூறுவது நியாயமா?
இவ்வாறு கூறினார்.