தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கன்னட அமைப்பினர் கண்டனம்

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கன்னட அமைப்பினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

Update: 2023-09-04 18:45 GMT

உப்பள்ளி-

தமிழ்நாடு சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்துக்கு எதிராக பேசியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று தார்வாரில் ஸ்ரீராம் சேனா அமைப்பு தலைவர் பிரமோத் முத்தாலிக் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கையை குறித்து டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இந்த பேச்சு மதவாத வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது.

இதற்கு தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறோம். உதயநிதி ஸ்டாலின் அரசியலில் எந்தவொரு அனுபவமும் கிடையாது.

உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் உதயநிதி ஸ்டாலின் மீது ஸ்ரீராம் சேனா அமைப்பு சார்பில் வழக்கு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்படும், என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்