இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-09-08 12:50 GMT

புதுடெல்லி,

குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய் ஆகும். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில், 10ல் ஒருவர் இறக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தொற்று பரவாமல் தடுக்கும் பணிகளில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்தியாவை பொறுத்தவரையில், மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தி அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் தெரிவித்துள்ளது. தமிழகத்திலும் விமான நிலையத்தில் பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வெளிநாட்டில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. குரங்கம்மை நோய் பாதிப்புள்ள நாட்டில் இருந்து வந்தவருக்கு அறிகுறி காணப்பட்டது. குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் வந்த பயணி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்