சுவாதி மாலிவால் எம்.பி. புகார்: பா.ஜனதா சதியின் ஒரு பகுதி-ஆம் ஆத்மி மந்திரி அதிஷி பேட்டி

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது என்று ஆம் ஆத்மி மந்திரி அதிஷி கூறியுள்ளார்.

Update: 2024-05-18 02:12 GMT

புதுடெல்லி,

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி மேல்-சபை எம்.பி.யுமான சுவாதி மாலிவால், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் சுவாதி மாலிவாலின் புகார் ஆதாரமற்றது என டெல்லி அரசின் கல்வி மந்திரி அதிஷி கூறியுள்ளார். இது தொடர்பாக நேற்று மாலை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததில் இருந்தே பா.ஜனதா கலக்கத்தில் உள்ளது. அதனால் உருவாக்கிய சதித்திட்டமே இது. பா.ஜனதா சதியின் ஒரு பகுதியே சுவாதி மாலிவாலின் புகார். கடந்த 13-ந்தேதி அவர் முதல்-மந்திரியை சந்திக்க வந்திருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முடியாது என தனி செயலாளர் கூறி இருக்கிறார். அதையும் மீறி அதிகாரியை எத்தணித்து உள்ளே நுழைய சுவாதி மாலிவால் முயன்றிருக்கிறார். இதுதான் நடந்திருக்கிறது. நல்லவேளை அப்போது அங்கே கெஜ்ரிவால் இல்லை. இருந்திருந்தால் புகாருக்கு அவர் ஆளாகி இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்