பஞ்சாப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் டிரோன்
பஞ்சாப் அருகே உள்ள சர்வதே எல்லைக்கோட்டினை கடந்து பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவ முயலும் சம்பவங்கள் அ்டிக்கடி அரங்கேறுகின்றன.
சண்டிகார்,
பஞ்சாப் அருகே உள்ள சர்வதே எல்லைக்கோட்டினை கடந்து பாகிஸ்தான் டிரோன்கள் ஊடுருவ முயலும் சம்பவங்கள் அ்டிக்கடி அரங்கேறுகின்றன. முன்பெல்லாம் பயங்கரவாதிகள் நுழைவை எதிர்த்து ராணுவத்தினர் செயல்பட்டு வந்தனர். இப்போது நவீன தளவாடங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
இந்தநிலையில் அமிர்தசரஸ் அருகே எல்லைகோட்டினை கடந்து பாகிஸ்தான் டிரோன் ஒன்று ஊடுருவியது. அதனை பாதுகாப்புப்பணியில் இருந்த ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். அது கடத்திவந்த 2 கிலோ போதைப்பொருளையும் கைப்பற்றினர்.