இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல்: சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை இன்று முதல் நேரடி ஒளிபரப்பு

அரசியல் சாசன அமர்வுகளின் விசாரணைகளை இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியது சுப்ரீம் கோர்ட்டு.

Update: 2022-09-27 11:40 GMT

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வகுக்கப்பட்டது. சோதனை முறையில் 3 மாதங்கள் தேசிய மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் இன்று (27-ந்தேதி) முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிப்பு வெளியானது.

இதையடுத்து இன்று முதல் சுப்ரீம் கோர்ட்டு வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் வழக்காக பொருளாதாரத்தில் பின் தங்கியோர்களுக்கான 10 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு இன்று நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இது இந்திய நீதித்துறையில் ஒரு மைல்கல் ஆகும். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றில் வழக்கு விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்வது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்