2018-ம் ஆண்டில் இருந்து தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உத்தரவிட வேண்டும் - புதிய மனு தாக்கல்
தேர்தல் பத்திர விவரங்களை 2018-ம் ஆண்டில் இருந்து வெளியிட உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி முதல் வாங்கப்பட்ட தேர்தல் பத்திர விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்தது. ஆனால், 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்தே தேர்தல் பத்திரங்கள் விற்பனை தொடங்கி விட்டதாக 'சிட்டிசன்ஸ் ரைட்ஸ் டிரஸ்ட்' என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
எனவே, 2018-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதியில் இருந்து 2019-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந் தேதிவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு தகவல்களையும் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.