பெங்களூரு மாநகராட்சி வார்டு இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய வழக்கு- அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய வழக்கில் அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-09-03 21:25 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான வார்டு இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய வழக்கில் அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இடஒதுக்கீடுவை ரத்து செய்ய...

பெங்களூரு மாநகராட்சி தேர்தலை நடத்துவதற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, மாநகராட்சியின் வார்டுகள் 198-ல் இருந்து 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை மற்றும் இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு வெளியான இடஒதுக்கீடு பட்டியலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வார்டு இடஒதுக்கீடு தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் ஈஜிபுராவை சேர்ந்த மகாதேவ் என்பவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் சந்தன் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் வாதிடும் போது, பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள இடஒதுக்கீடு பட்டியல் விதிமுறைகளை மீறியதாக உள்ளது. எந்த சாதிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வார்டுகளின் இடஒதுக்கீடு நடைபெறவில்லை. எனவே இடஒதுக்கீடு காரணமாக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும், என்று வாதிட்டார்.

பதில் அளிக்க உத்தரவு

இதையடுத்து, இந்த மனு மீது கர்நாடக அரசும், மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி ஹேமந்த் சந்தன் தெரிவித்தார். மேலும் இந்த மனு மீதான விசாரணையை வருகிற 12-ந் தேதிக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்