தஞ்சாவூர் பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை

பெங்களூருவில், விஷ ஊசி செலுத்தி கொண்டு தஞ்சாவூரை சேர்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-05-19 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில், விஷ ஊசி செலுத்தி கொண்டு தஞ்சாவூரை சேர்ந்த பெண் டாக்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர் பெண் டாக்டர்

தமிழ்நாடு தஞ்சாவூரை சேர்ந்தவர் ஆரத்தி (வயது 29). இவர் டாக்டர் ஆவார். பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆரத்தி டாக்டராக பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆரத்தி வழக்கம் போல் ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு வந்திருந்தார். வேலை முடிந்ததும் தன்னுடைய அறைக்கு ஓய்வெடுக்க ஆரத்தி சென்றிருந்தார்.

அதன்பிறகு, அவர் நீண்ட நேரமாக அறையை விட்டு வெளியே வரவில்லை. ஆஸ்பத்திரி ஊழியர் வந்து பார்த்த போது தான் கழிவறைக்குள் டாக்டர் ஆரத்தி பிணமாக கிடந்தார். அவரது உடலுக்கு அருகில் ஊசி போட பயன்படும் சிரிஞ்சி கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஹெப்பகோடி போலீசார் விரைந்து வந்து ஆரத்தியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

பெண் டாக்டர் தற்கொலை

அப்போது விஷ ஊசி செலுத்தி கொண்டு ஆரத்தி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் செலுத்தி கொண்ட மருந்து எந்த மாதிரியான மருந்து என்பது? தெரியவில்லை. இதையடுத்து, ஊசி மற்றும் சிரிஞ்சி ஆகியவை தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வந்த பிறகு தான் எந்த மாதிரியான மருந்தை ஆரத்தி செலுத்தி கொண்டு தற்கொலை செய்தார் என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் டாக்டர் ஆரத்தி தற்கொலைக்கான சரியான காரணம் என்ன? என்பதும் தெரியவில்லை. அதுபற்றி குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆரத்தியின் செல்போனையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்