முன்னாள் மந்திரி சுதாகர் தோல்வியால் ஆதரவாளர் தற்கொலை

சிக்பள்ளாப்பூர் தொகுதியில் முன்னாள் மந்திரி சுதாகர் தோல்வியால் விரக்தி அடைந்த ஆதரவாளர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.;

Update:2023-05-16 02:56 IST

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் தொகுதியில் முன்னாள் மந்திரி சுதாகர் தோல்வியால் விரக்தி அடைந்த ஆதரவாளர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

சுதாகர் அதிர்ச்சி தோல்வி

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் சி.டி.ரவி, மந்திரிகள் 13 பேரும் படுதோல்வியை சந்தித்தனர். இதில் கர்நாடக சுகாதாரத் துறை மந்திரியாக இருந்த சுதாகர் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால் அவர் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்து காங்கிரஸ் சார்பில் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட்ட 38 வயதான பிரதீப் ஈஸ்வரிடம் சுமார் 11 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் சுதாகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார்கள்.

தீவிர ஆதரவாளர்

இந்த நிலையில், சுதாகர் தோல்வியை சகித்துக்கொள்ள முடியாத அவரது ஆதரவாளர் ஒருவர் தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

சிக்பள்ளாப்பூர் டவுன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் சுதாகர் (வயது 43). இவர் சுதாகரின் தீவிர ஆதரவாளர் ஆவார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சுதாகருக்கு ஆதரவாக இவர் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஆனால் தேர்தலில் சுதாகர் தோல்வி அடைந்ததை அறிந்து வெங்கடேஷ் அதிர்ச்சியில் இருந்து வந்தார். மேலும் தனது தலைவர் சுதாகர் தோல்வி அடைந்ததை எண்ணி மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

ஏரியில் குதித்து தற்கொலை

அதன்படி அவர் அப்பகுதியில் உள்ள ஏரியில் குதித்து தற்கொலை செய்துெகாண்டார். ஏரியில் மிதந்த அவரது உடலை சிக்பள்ளாப்பூர் டவுன் போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்னாள் மந்திரி சுதாகர் தேர்தலில் தோல்வி அடைந்த விரக்தியில் வெங்கடேஷ் ஏரியில் குதித்துதற்கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மற்ெறாரு சம்பவம்

இதுபோல் மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளர் சா.ரா.மகேஷ் தோல்வி அடைந்தார். இதனால் மனம் உடைந்த அவரது ஆதரவாளரான கே.ஆர்.நகர் அருகே தம்மனஹள்ளியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்