செல்போனில் பாஸ்வேர்டை மாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் பாஸ்வேர்டை மாற்றியதால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-12 22:26 GMT

தொட்டபள்ளாப்புரா:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா அருகே கானிகர பேட்டை பகுதியை சேர்ந்தவர் ருஜிதா (வயது 19). இவர், செல்போன் பயன்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். எப்போதும் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று ருஜிதாவிடம் பெற்றோர் கூறி வந்துள்ளார். ஆனாலும் அவர் செல்போன் பயன்படுத்துவதை குறைத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தனது அக்கா செல்போன் பயன்படுத்த கூடாது என்பதற்காக, பாஸ்வேர்டை சகோதரர் மாற்றி உள்ளார். அந்த பாஸ்வேர்டு பற்றி தன்னிடம் தெரிவிக்கும்படி சகோதரரிடம் கேட்டு ருஜிதா சண்டை போட்டுள்ளார். ஆனால் பாஸ்வேர்டை தெரிவிக்க சகோதர் மறுத்து விட்டார்.

இதன் காரணமாக மனம் உடைந்த ருஜிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் விரைந்து சென்று ருஜிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்