மணிப்பூர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை

மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக டி கிருஷ்ணகுமாரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2024-11-18 09:24 GMT

கோப்புப்படம்

இம்பால்,

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் தற்போது அந்த இடத்துக்கு டி.கிருஷ்ணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். மணிப்பூரில் தொடர்ந்து, ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வந்தன.

இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதுடன், இணைய சேவையும் தடை செய்யப்பட்டது. இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியது. இந்நிலையில், சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மணிப்பூரில் வன்முறை தொடர்ச்சியாக, மத்திய ஆயுத போலீஸ் படையை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் கம்பெனி படைகள் செல்லும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்