கரும்பு விவசாயி சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த சீமான்

கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.;

Update: 2024-03-06 18:44 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாம் தமிழர் கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு அந்த சின்னம், பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி என்ற ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது நாங்கள் போட்டியிட்டு, அதிக வாக்குகள் பெற்ற சின்னம். எனவே கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி சீமான் தாக்கல் செய்த ரிட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. டெல்லி ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராக, சீமான் சார்பில் வக்கீல் நவ்நீத் துக்கர் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்