சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க முடியாமல் தவிப்பு

Update: 2023-08-24 18:45 GMT

ஹெப்பால்:-

பெங்களூரு ஹெப்பாலில் உள்ள கிரசன்ட் ஆங்கிலப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவர், முகமது. கராத்தே வீரரான இவர் ஜகர்த்தாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க தேர்வாகி இருந்தார். ஆனால் போதிய நிதி இல்லாததால் அவர் சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவித்து வந்தார்.

இதுபற்றி, மாணவனும், அவரது பெற்றோரும் கர்நாடக சிறுபான்மை நலத்துறை மந்திரி ஜமீர்அகமது கானிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதாவது நிதி உதவி கோரியிருந்தனர். இந்த நிலையில் முகமது ஜகர்த்தாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்க செல்ல வழிவகை செய்துள்ளார். அதாவது மாணவர் ஜகர்த்தா செல்ல ரூ.65 ஆயிரம் கட்டணம் செலுத்தி விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துள்ளார். மேலும் மாணவனுக்கு தேவையான ஏற்பாடுகளையும் சொந்த செலவில் செய்துகொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்