உடுப்பியில் திடீர் கனமழை

உடுப்பியில் திடீர் கனமழை பெய்தது.

Update: 2023-05-30 18:45 GMT

மங்களூரு-

உடுப்பி மாவட்டத்தில் கடந்த மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. சில நாட்களாக மழை பெய்யுமா என மக்கள் ஏக்கத்துடன் காத்து இருந்தனர். மேலும் விவசாயிகள் வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர். இந்்தநிலையில் உடுப்பி டவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை திடீரென மழை பெய்தது. சில இடங்களில் இ்டி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. அந்த வழியாக சென்ற வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மேலும் வாகனங்கள் தண்ணீரில் ஊர்ந்து சென்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வேலை மற்றும் கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் பெரும் பாதிப்படைந்தனர். சில இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் காற்றுடன் பெய்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முறிந்து விழுந்தன. அங்கு மரங்களை வெட்டி அகற்றும் பணி நடைபெற்றது. இதனால் மாற்று பாதையை போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.இந்தநிலையில் கடந்த சில நாட்களாக உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதனால் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தட்டுப்பாடு குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்