மராட்டிய மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மும்பை,
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்ததையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.