பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள் -அதிர்ச்சி காட்சிகள்

இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-09-08 14:18 GMT

உத்தர பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. உத்தர பிரதேசம் மாநிலம், பிளாக் பிப்ரா கிராமத்தில் ஆரம்ப பள்ளியின் முதல்வர் மேற்பார்வையில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்கின்றனர்

கழிவறையை நன்றாக சுத்தம் செய்யும்படி பள்ளி முதல்வர் கண்டிப்பது போல அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்