உடுப்பியில் விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டெடுப்பு

உடுப்பியில் விஜயநகர பேரரசு கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2023-01-23 21:56 GMT

மங்களூரு:

உடுப்பி மாவட்டம் பன்னஞ்சே அருகே மூடனிடம்பூர் கிராமத்தில் சனீஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள நிலத்தில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியை சேர்ந்த சிலர், அங்கு குழி தோண்டியபோது கல்வெட்டு ஒன்று தென்பட்டது. இதுகுறித்து அவர்கள், தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிகாரிகள் அந்த கிராமத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர். அந்த கல்வெட்டு 4 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் இருந்தது. வலது பக்கம் சந்திரனும், இடது பக்கம் சூரியனும், நடுவில் சிவலிங்கமும் இருந்தது. மேலும் அடிப்பகுதியில் வாளும், கேடயமும் ஏந்தியப்படி ஒரு உருவம் இருந்தது. அப்போது அது விஜயநகர பேரரசு கால கல்வெட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த கல்வெட்டை தொல்லியல் துறை அதிகாரிகள் எடுத்து சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்