பெண்கள் கழிவறைக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு

பெண்கள் கழிவறைக்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-29 16:37 GMT

பெலகாவி: பெலகாவி (மாவட்டம்) டவுனில் கன்னட சாகித்ய பவன் அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது. அங்குள்ள பெண்கள் கழிவறை வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு வாலிபர் புகுந்தார். பின்னர் அவர் பெண்கள் கழிவறை வளாகத்தை உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த சாகித்ய பவன் நிர்வாகிகள், அந்த நபரை கதவை திறந்து கழிவறைக்குள் இருந்து வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். இதுபற்றி தகவல் அறிந்த மார்க்கெட் போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரிடம் பேசினர்.


பின்னர் கழிவறை வளாக கதவை அந்த வாலிபர் திறந்தார். அப்போது அவர் கையில் ஒரு டம்ளரில் மதுவும், மிளகாய் பொடியும் வைத்திருந்தார். மதுபோதையில் அவர் இவ்வாறு நடந்து கொண்டது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில் அந்த வாலிபர் கித்தூர் தாலுகா கோதானபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்